/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அழைப்பிதழ் இல்லாத 'வல்வில் ஓரி' விழா; மலைவாழ் மக்கள் ஏமாற்றம்
/
அழைப்பிதழ் இல்லாத 'வல்வில் ஓரி' விழா; மலைவாழ் மக்கள் ஏமாற்றம்
அழைப்பிதழ் இல்லாத 'வல்வில் ஓரி' விழா; மலைவாழ் மக்கள் ஏமாற்றம்
அழைப்பிதழ் இல்லாத 'வல்வில் ஓரி' விழா; மலைவாழ் மக்கள் ஏமாற்றம்
ADDED : ஜூலை 31, 2024 07:15 AM
ராசிபுரம் : மாவட்டத்தில் நடக்கும் முக்கிய விழாவான, 'வல்வில் ஓரி' விழாவுக்கு அழைப்பிதழ் அச்சடிக்காததால், மலைவாழ் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தின் அடையாளமாக உள்ள கொல்லிமலையில், ஆண்டுதோறும் ஆடி, 18ல் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடத்தப்படும். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், இரண்டு நாட்கள் நடக்கும் இவ்விழாவில் மலைவாழ் மக்களின் கலைநிகழ்ச்சி, பாரம்பரிய நடனம், அரசுத்துறை கண்காட்சி, நாய்கள் கண்காட்சி, தாவரவியல் பூங்கா, மலர் கண்காட்சி, படகு இல்லம், மலைவாழ் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், வில் வித்தை போட்டி ஆகியவை நடத்தப்படும். மேலும், ஆடிப்பெருக்கில் அரப்பளீஸ்வரர், எட்டுக்கை அம்மன் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்வர். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசில்லா அருவி, நம் அருவி, சிற்றருவி ஆகியவற்றில் பக்தர்கள் குளித்துவிட்டு சுவாமியை வழிபட்டு செல்வர்.
முதல்நாள் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து விழா தொடங்குவது வழக்கம். வல்வில் ஓரிக்கு மாலை அணிவிக்கும் மக்கள் பிரதிநிதிகள் பதவி பறிபோய்விடும் என்ற நம்பிக்கை உள்ளதால், மேற்கண்ட நிகழ்ச்சியில் அமைச்சர், எம்.எல்.ஏ., - எம்.பிக்கள் யாரும் கலந்து கொள்வதில்லை. ஆனாலும், 'வல்வில் ஓரி' விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பிதழ் அடித்து மலைவாழ் மக்களின் முக்கிய பிரதிநிதி உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு கொடுப்பது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் அழைப்பிதழ் அச்சடிப்பதை நிறுத்தி விட்டது.தற்போது, 'வாட்ஸாப்'பில் கொல்லிமலை, வல்வில் ஓரி படத்துடன் விழா, தேதி மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். இதனால், மலைவாழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.