/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
/
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
ADDED : செப் 25, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அடுத்த, குட்டலாடம்பட்டியை சேர்ந்தவர் மெய்வேல் மனைவி ராசம்மாள், 78. இவர், நேற்று மாலை, 3:30 மணிக்கு, அதே பகுதியில் விளை நிலத்தில் உள்ள வீட்டிற்கு நேற்று நடந்து சென்றார்.
அப்போது, விவசாய நிலத்தில் உள்ள, 80 ஆடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர், ராசிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிணற்றில் இறங்கி ராசம்மாளை உயிருடன் மீட்டனர். கிணற்றில், 5 அடி மட்டுமே தண்ணீர் இருந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.