/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அன்புமணி நீக்கம்: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
/
அன்புமணி நீக்கம்: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ADDED : செப் 12, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சி, 2 அணிகளாக செயல்பட்டு வந்தது. ஆளுக்கு ஒருவர் நிர்வாகிகளை நியமித்து வந்தனர்.
இந்த நிலையில் பா.ம.க., தலைவர் அன்புமணியை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் நேற்று அறிவித்தார். அறிவிப்பு வெளியானதை அடுத்து ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் தலைமையில், ராமதாஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.