/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மயக்க மருந்து அடித்து நகை, பணம்; கொள்ளை; கொள்ளையர் அட்டகாசம்
/
மயக்க மருந்து அடித்து நகை, பணம்; கொள்ளை; கொள்ளையர் அட்டகாசம்
மயக்க மருந்து அடித்து நகை, பணம்; கொள்ளை; கொள்ளையர் அட்டகாசம்
மயக்க மருந்து அடித்து நகை, பணம்; கொள்ளை; கொள்ளையர் அட்டகாசம்
ADDED : நவ 29, 2024 07:38 AM
ப.வேலுார்: பரமத்தி அருகே, பெண் முகத்தில் மயக்க மருந்து அடித்து, கைகளை கட்டிப்போட்டு, முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே, தேவி பாளையத்தை சேர்ந்த மோகன், 35, லாரி டிரைவர். இவரது மனைவி சவிதா, 29. மோகன் வேலைக்கு சென்று விட்டதால், வீட்டில் தனியாக இருந்த சவிதா நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு பாத்ரூம் செல்ல வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்த இருவர், சவிதாவின் வாயில் கர்ச்சிப் வைத்து அழுத்தி, கைகளை கட்டி உள்ளனர்.
பின்னர் பீரோவில் இருந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு, சவிதா காதில் போட்டிருந்த தோடு மற்றும் கழுத்தில் இருந்த தாலி, பீரோவில் இருந்த, 4,500 ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். சவிதா சத்தம் போடாமல் இருக்க, முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து விட்டு முகமூடி கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். நள்ளிரவில் மயக்கம் தெளிந்த சவிதா நடந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன், பரமத்தி போலீசில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் இரண்டு பவுன் நகை, 4,500 ரூபாய் கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.