ADDED : பிப் 07, 2026 09:11 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்: தமிழ்மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று நாமக்கல் பூங்கா சாலையில், 4ம் நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் அனுராதா தலைமை வகித்தார்.
அதில், வாக்குறுதிப்படி, அங்கன்வாடி, சத்துணவு பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில், 19,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். சமையலர், உதவியாளருக்கு, அலுவலக உதவியாளர் நிலையில், 15,700 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். அரசுத்துறை காலி பணியிடங்களை நிரப்பும்போது, 10 ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை, 50 சதவீதம் ஈர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
