/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 11, 2024 12:41 AM
நாமக்கல்: 'அங்கன்வாடி திட்டத்தை தனியார் மயமாக்கும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்' எனக்கோரி, ஊழியர், உதவியாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி திட்டத்தை தனியார் மயமாக்கும் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி, அதன் ஊழியர், உதவியாளர் சங்கத்தினர், நாமக்கல் பூங்கா சாலையில், கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பாண்டிமா தேவி தலைமை வகித்தார். செயலாளர் பிரேமா முன்னிலை வகித்தார். அதில், அங்கன்வாடி திட்டத்தை தனியார் மயமாக்கும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். தனியார் மயமாக்கும் மத்திய அரசுக்கு துணை போக கூடாது. குறைந்தபட்ச ஊதியம், ஊழியர்களுக்கு, 26,000 ரூபாய், உதவியாளர்களுக்கு, 18,000 ரூபாய் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை, 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்க-ளுக்கு ஓய்வூதியத்தை, 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். 5 ஆண்டு பணி முடித்த மினி மைய அங்கன்வாடி ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பதவி உயர்வு வழங்க வேண்டும்.அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும், துறை சார்ந்த பணி-களை விரைந்து முடிக்க புதிய மொபைல் போன் வழங்க வேண்டும். மே மாதத்தில் வழங்கக்கூடிய, 15 நாட்கள் கோடை விடுமுறையை ஒரு மாதமாக உயர்த்த வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கக்கூடிய அரிசி, முட்டை மற்றும் இதர பொருட்களை பணி நேரத்தில் அந்தந்த மையங்களிலேயே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு-றுத்தி கோஷம் எழுப்பினர். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முரு-கேசன், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட செய-லாளர் இளவேந்தன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.