/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூடுதல் பணிக்கு ரூ.5,000 கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
/
கூடுதல் பணிக்கு ரூ.5,000 கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
கூடுதல் பணிக்கு ரூ.5,000 கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
கூடுதல் பணிக்கு ரூ.5,000 கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
ADDED : மே 03, 2025 01:20 AM
நாமக்கல்:
கூடுதல் பணிக்கு, 5,000 ரூபாய் கேட்டு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், நேற்று மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். செயலாளர் பிரேமா வரவேற்றார்.
பொருளாளர் கலா, துணைத்தலைவர்கள் காந்திமதி, சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி போராட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, அரசு ஒத்துக்கொண்ட கோடை விடுமுறையை ஒரு மாதமாக வழங்க வேண்டும். அனைத்து காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
உதவியாளர் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். காலியாக உள்ள மையங்களில்,
உதவியாளர் பணியை செய்ய வற்புறுத்தக்கூடாது. கூடுதல் பொறுப்பு பார்க்கும் ஊழியர்களுக்கு, மாதம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும். புதிய மொபைல் போன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
'பேஸ் கேப்சர்' மூலம் 'டி.எச்.ஆர்.,' வழங்குவதில் சாத்தியம் இல்லாத, 'ஓ.டி.பி.,' மற்றும் முழு முகப்பதிவு போட்டோ எடுக்கும் பணியை கைவிட வேண்டும். 1993ல் பணியில் சேர்ந்த அனைவருக்கும் மேற்பார்வையாளர்-2 பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து, 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், உதவி
யாளர்கள் பங்கேற்றனர்.