/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 05, 2025 01:03 AM
நாமக்கல், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட துணை தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார்.
அதில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வுபெறும் போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 10 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாயும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்ற, நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
பணி ஓய்வுக்கு பின், அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியமாக மாதம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம்
எழுப்பினர்.
மாநில துணை தலைவர் பிரேமா, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ரங்கசாமி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

