ADDED : பிப் 14, 2026 06:23 AM
நாமக்கல்;தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உத-வியாளர் சங்கத்தினர், நேற்று நாமக்கல் பூங்கா சாலையில், 11ம் நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் வாக்குறுதிப்படி, அங்கன்வாடி, சத்து-ணவு பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில், 19,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். சமையலர், உதவியாளருக்கு, அலுவ-லக உதவியாளர் நிலையில், 15,700 ரூபாய் சம்-பளம் வழங்க வேண்டும். அரசுத்துறை காலி பணியிடங்களை நிரப்பும்போது, 10 ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை, 50 சதவீதம் ஈர்த்திட வேண்டும்.
அங்கன்வாடி, சத்துணவு திட்டங்களில் உள்ள, 60,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நாமக்கல் பாஸ்கர், சேந்தமங்-கலம் சந்திரசேகரன் ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து, ஆத-ரவு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்க-ளுக்கு பிஸ்கட், குளிர்பானம் வழங்கினர். அ.தி.மு.க, பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்-தரம், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முரளிபாலுசாமி உள்ளிட்டோர் பங்-கேற்றனர்.
