தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 14, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்; அங்கன்வாடி ஊழியர்கள் குறித்து தரக்குறைவாக பேசி, சமூக வலைத்த-ளத்தில் வீடியோ வெளியிட்ட, நாகப்பட்டினத்தை சேர்ந்த கவுசல்யா என்ற பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், நாமக்கல் பூங்க சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதன் செயலாளர் ஜெயக்கொடி தலைமை வகித்தார். தலைவர் அனுராதா, பொருளாளர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதில், சமூக வலைதளங்களில் அங்கன்வாடி பணியா-ளர்களை அவதுாறாகவும், தரக்குறைவான வார்த்தைகளாலும் விமர்சித்த பெண் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, கவுசல்யாவின் புகைப் படத்தை தீவைத்து எரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us