/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சித்திரை 3வது ஞாயிறில் தங்க கவசத்தில் ஆஞ்சநேயர்
/
சித்திரை 3வது ஞாயிறில் தங்க கவசத்தில் ஆஞ்சநேயர்
ADDED : ஏப் 29, 2024 07:26 AM
நாமக்கல் : நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. அங்கு எதிரே உள்ள நரசிம்மர் சுவாமியை கை கூப்பி வணங்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இங்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் ஞாயிற்றுக்கிழமை, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும்.
அதன்படி, சித்திரை மூன்றாவது ஞாயிறையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு வடை மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, சுவாமிக்கு தங்கக்கவச அலங்காரம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. கோடை விடுமுறை நாளான, நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

