/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தங்க கவசத்தில் ஜொலித்த ஆஞ்சநேயர்
/
தங்க கவசத்தில் ஜொலித்த ஆஞ்சநேயர்
ADDED : ஆக 04, 2025 09:01 AM
நாமக்கல்: நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுகிழமை, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு வருட பிறப்பு, ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வடமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, தங்கம், வெள்ளி, முத்தங்கி, சந்தனம், வெண்ணை ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.
அதன்படி, ஆடிப்பெருக்கான நேற்று காலை, பல், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மதியம், 12:30 மணிக்கு சுவாமிக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பல்வேறு பகுதியில் இருந்து வந்த திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.