ADDED : ஜூன் 05, 2025 01:39 AM
குமாரபாளையம், குமாரபாளையம் பா.ஜ., சார்பில், மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா, மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர், வழக்கறிஞர் தங்கவேல் தலைமையில் நடந்தது. ஆனங்கூர் பிரிவு சாலையில் நடந்த விழாவில், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பா.ஜ., கட்சிக்காக, அண்ணாமலை செய்த பணிகள் குறித்து, வழக்கறிஞர் தங்கவேல் பேசினார். பொதுக்குழு உறுப்பினர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
* புதுச்சத்திரம் ஒன்றிய பா.ஜ., சார்பில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இதில், புதுச்சத்திரம் ஒன்றிய தலைவர் செல்வம், கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராம்குமார், முன்னாள் துணை தலைவர் வடிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.