ADDED : செப் 26, 2026 06:36 AM
அ நிறம் | அளவு
ப.வேலுார்:புரட்டாசி
மாத வளர்பிறை சதுர்த்தசியையொட்டி, நேற்று ப.வேலுார்
திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நடராஜருக்கு கைலாய வாத்தியம்
முழங்க சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதில், தேவாரம், திருவாசகம் ஓதலுடன்
சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜருக்கு பால், தயிர், பன்னீர்,
இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன்
உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை
காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
