/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மூடப்பட்ட இடத்தில் மீண்டும் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்
/
மூடப்பட்ட இடத்தில் மீண்டும் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்
மூடப்பட்ட இடத்தில் மீண்டும் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்
மூடப்பட்ட இடத்தில் மீண்டும் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜூன் 17, 2025 02:03 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, சந்தைப்பேட்டை பகுதியில் இருந்து ராஜ்வீதி செல்லும் சாலையின் ஓரிடத்தில், குடிநீர் பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்தவுடன் பள்ளம் மூடப்பட்டது. மூடப்பட்ட பள்ளம் பகுதியில் மீண்டும் மண் இறங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் கார், டூவீலர், சரக்கு வாகனம் அதிகளவில் சென்று வருகின்றன. இரவில், விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் செந்தில் கூறுகையில், ''பள்ளிப்பாளையம் நகராட்சியில், குடிநீர் பணிக்காக, கடந்த, 15 நாட்களுக்கு முன் ராஜ்வீதி வழித்தடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு சீரமைக்கப்பு பணி நடந்தது. பணி முடிந்தவுடன் பள்ளத்தை மூடிவிட்டனர். ஆனால் சரியாக மூடவில்லை. இதனால், வாகனங்கள் செல்ல செல்ல மண் இறங்கி மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் இன்னும் சீரமைக்கவில்லை. இதேநிலை இருந்தால் விபத்து கண்டிப்பாக ஏற்பட வாய்ப்புள்ளது,'' என்றார்.