/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி
/
நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி
நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி
நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி
ADDED : பிப் 09, 2025 07:03 AM
நாமக்கல்: நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில், போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைவர் சர-வணன் தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் ராஜசுந்தரவேல், போதைப்பொருள் எதிர்ப்பு குழு பொறுப்பாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.
நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள சட்டக்கல்லுாரி முன் தொடங்கிய பேரணி, பயணியர் மாளிகை, மோகனுார் சாலை, பாரத் ஸ்டேட் வங்கி வழியாக சென்று மீண்டும் துவங்கிய இடத்தில் முடிந்தது. பேரணியின் போது, போதைப்பொருள் பயன்பாட்டின் தீமை, உடல், மனநலம் பாதிப்பு குறித்து விழிப்பு-ணர்வு துண்டு பிரசுரங்கள், பொதுமக்களுக்கு வினியோகம் செய்-யப்பட்டது. மேலும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதா-கைகளை, மாணவ, மாணவியர் ஏந்தியபடி, விழிப்புணர்வு கோஷம் எழுப்பி சென்றனர்.