/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு: துண்டு பிரசுரம் வினியோகம்
/
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு: துண்டு பிரசுரம் வினியோகம்
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு: துண்டு பிரசுரம் வினியோகம்
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு: துண்டு பிரசுரம் வினியோகம்
ADDED : அக் 28, 2025 01:35 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம், நேற்று துவங்கி, வரும், 2 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து, அனைத்து அலுவலகங்களிலும், நேர்மை உறுதி மொழியை ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை, அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். டி.ஆர்.ஓ., சுமன், கலெக்டரினர் நேர்முக உதவியாளர் சந்தியா, தனித்துணை கலெக்டர் சுந்தரராஜன், அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில், இன்ஸ்பெக்டர் பிரபு, எஸ்.ஐ., புருசோத்தமன் ஆகியோர், கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். அதில், 'அரசு அலுவலர்கள் அவர்களுடைய கடமையை செய்து கொடுக்க லஞ்சம் கேட்கிறார்களா? அரசு அலுவலர்களின் ஆதரவுடன் இடைத்தரகர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? மக்களுக்கான செயல் திட்டங்கள் நிறைவேற்றுவதில் ஊழலா? அரசு ஊழியர்கள் நேர்மையற்ற முறையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்களா என்பது குறித்து, தகவல் தெரிவிக்கலாம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

