/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்லுாரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
/
கல்லுாரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
கல்லுாரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
கல்லுாரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : அக் 29, 2025 01:50 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் துறை சார்பில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், 'ஊழல் தடுப்பு விழிப்புணர்வு' கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர்(பொ) ராஜசேகர பாண்டியன் தலைமை வகித்தார்.
மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு பேசுகையில், ''அரசு அலுவலகங்களில், தங்களுடைய கடமையை செய்ய லஞ்சம் கேட்டால், மாணவர்கள் கொடுக்காமல் நேர்மையான முறையில் வாழ வேண்டும். லஞ்சம் கொடுப்பதும், லஞ்சம் வாங்குவதும் குற்றம்,'' என்றார்.ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.