/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 11, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார் போலீசார் மற்றும் ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது.
ப.வேலுார் பள்ளி சாலையில் தொடங்கிய ஊர்வலம், காவேரி சாலை, நான்கு ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் பள்ளி சாலையில் நிறைவடைந்தது. இதில், ப.வேலுார் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, செயல் அலுவலர் திருநாவுக்கரசு, துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஜனார்த்தனன், தாமரைச்செல்வி, விஜியகுமார், டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் மற்றும் கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.