/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நில எடுப்பு சட்டத்தை ரத்து செய்ய 'சிப்காட்' எதிர்ப்பு குழு கோரிக்கை
/
நில எடுப்பு சட்டத்தை ரத்து செய்ய 'சிப்காட்' எதிர்ப்பு குழு கோரிக்கை
நில எடுப்பு சட்டத்தை ரத்து செய்ய 'சிப்காட்' எதிர்ப்பு குழு கோரிக்கை
நில எடுப்பு சட்டத்தை ரத்து செய்ய 'சிப்காட்' எதிர்ப்பு குழு கோரிக்கை
ADDED : நவ 09, 2024 03:55 AM
நாமக்கல்: 'தமிழக அரசு, நில எடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரம-ணியன் தலைமையில், சிப்காட் எதிர்ப்பு குழுவினர், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, 2023ல் நில எடுப்பு சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது. தொடர்ந்து, அந்த மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். அந்த சட்டப்படி, 100 ஹெக்டேருக்கு குறையாத நிலங்களை, 'சிறப்பு திட்டம்' என்னும் பெயரில் பெற விரும்பும், புதிதாக தொழில் தொடங்குவோர் விண்ணப்பித்து பெறலாம். இந்த திட்-டத்திற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த சட்டத்தை தமிழக அரசு, ஓராண்-டாக நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைத்தது.தற்போது, திடீரென நில ஒருங்கிணைப்பு சிறப்பு சட்ட விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இச்சட்டத்தில் எந்த தடையும் இன்றி, விவசாயிகளின் நிலங்களை எடுத்தால், விவசாயம் கடு-மையாக பாதிக்கப்படும். அதனால், நிபந்தனை ஏதும் இன்றி இந்த சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சரிடம்...
நாமக்கல்லில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, நேற்று மாலை, 5:00 மணிக்கு, மத்திய இணை அமைச்சர் முருகன் வருகை தந்தார். அவருக்கு, பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து, விருந்தினர் மாளிகையில், பொதுமக்களிடம் மனுக்-களை பெற்றுக்கொண்டார். அதில், விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் வழங்கிய மனுவில், 'நாமக்கல் மாவட்டம், வளையப்-பட்டி அருகே, விவசாய விளை நிலங்களை, 'சிப்காட்' தொழிற்-பேட்டை அமைக்க தமிழக அரசு கையகப்படுத்தக் கூடாது' என, வலியுறுத்தி இருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மத்திய இணை அமைச்சர் முருகன், அதன்மீது உரிய நடவடிக்கை எடுப்ப-தாக உறுதியளித்தார்.