/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
/
புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 10, 2024 01:40 AM
புகையிலை தடுப்பு
விழிப்புணர்வு பேரணி
மோகனுார், அக். 10-
மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமையாசிரியர் அருணாசலம் தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு டாக்டர் லலிதா, மருத்துவ அலுவலர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முன் துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் துவங்கிய இடத்தில் முடிந்தது. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு, அவற்றை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து, துண்டு பிரசுரமும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. மேலும், புகையிலையை ஒழிக்க வேண்டும்; புகையிலை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்கள் கோஷம் எழுப்பினர். சுகாதார ஆய்வாளர்கள் பாலுசாமி, முருகேசன், ஜெய்கண்ணன், ஜெகதீசன், கவின், போலீசார், ஆசிரியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.