/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அலுவலர் நியமனம்
/
சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அலுவலர் நியமனம்
சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அலுவலர் நியமனம்
சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அலுவலர் நியமனம்
ADDED : ஜூன் 09, 2025 03:32 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டபை தொகுதிகளுக்கும், தொகுதி வாரியாக, வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், இந்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் பதிவு அலுவலர்களை நியமித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் (எஸ்.சி.,), சேந்தமங்கலம் (எஸ்.டி.,), நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பின்படி, ராசிபுரம் தொகுதிக்கு, வாக்காளர் பதிவு அலுவலராக, மாவட்ட வழங்கல் துறை அலுவலர், சேந்தமங்கலத்துக்கு, சமூக பாதுகாப்பு திட்டதுணை கலெக்டர், நாமக்கல் தொகுதிக்கு, ஆர்.டி.ஓ., வக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், ப.வேலுார் தொகுதிக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், திருச்செங்கோடு தொகுதிக்கு, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., குமாரபாளையம் தொகுதிக்கு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆகியோரை வாக்காளர் பதிவு அலுவலர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியின் போது, வாக்காளர் பதிவு அலுவலர்கள், அந்தந்த தொகுதியில் நடக்கும் பணிகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.