/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில்ஆசிரியருக்கு பாராட்டு விழா
/
பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில்ஆசிரியருக்கு பாராட்டு விழா
பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில்ஆசிரியருக்கு பாராட்டு விழா
பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில்ஆசிரியருக்கு பாராட்டு விழா
ADDED : ஏப் 20, 2025 01:33 AM
நாமக்கல்:தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 2024-25ல், பணி நிறைவு பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அருள்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் குணசேகரன் வரவேற்றார். மாநில தணிக்கையாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாநில மகளிரணி செயலாளர் வாசுகி ஆகியோர் பாராட்டி பேசினர். பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள், 40 பேருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள் ஏற்புரையாற்றினர். நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், அருள்செல்வன் தலைவராகவும், குணசேகரன் செயலாளராகவும், முருகேசன் பொருளாளராகவும், குமார் சட்ட செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், சண்முகம் தலைமை நிலைய செயலாளராகவும், செந்தில்குமார் செய்தி தொடர்பு செயலாளராகவும், வாசுகி, மாலதி ஆகியோர் மகளிரணி செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல், துணைத்தலைவர்கள், துணை செயலாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.