ADDED : நவ 25, 2024 03:11 AM
மோகனுார்: மோகனுார் கிளை நுாலகத்தில், நுாலகராக பணியாற்றும் கனக-லட்சுமிக்கு, சீரிய நுாலக பணியை போற்றும் வகையில், தமி-ழக பள்ளி கல்வித்துறை பொது நுாலக இயக்கம் சார்பில், 'டாக்டர் எஸ்.ஆர்., அரங்கநாதன் விருது-2024' வழங்கப்பட்-டது. விருது பெற்ற நுாலகருக்கு, வாசகர் வட்டம் சார்பில், பாராட்டு விழா, மோகனுாரில் நேற்று நடந்தது. ஓய்வு பெற்ற ஆசிரியர் நவலடி தலைமை வகித்தார்.
வாசகர் வட்ட தலைவர் கோபால், ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விருது பெற்ற நுாலகர் கனகலட்சுமிக்கு புத்தகம் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டார். 1988-89ல் மோகனுார் அரசு மேல்-நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சார்பில், 10,000 ரூபாய் மதிப்பில் புத்தகம் வழங்கப்பட்டது. வாசகர் வட்ட துணைத்தலைவர் அமல்ராஜா, நிர்வாகிகள், உறுப்-பினர்கள், வாசகர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.