/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.3.50 கோடியில் நாவலடியான், மாரியம்மன் கோவிலில்அன்னதான கூடம், திருமதில் சுவர் கட்டுவதற்கு ஒப்புதல்
/
ரூ.3.50 கோடியில் நாவலடியான், மாரியம்மன் கோவிலில்அன்னதான கூடம், திருமதில் சுவர் கட்டுவதற்கு ஒப்புதல்
ரூ.3.50 கோடியில் நாவலடியான், மாரியம்மன் கோவிலில்அன்னதான கூடம், திருமதில் சுவர் கட்டுவதற்கு ஒப்புதல்
ரூ.3.50 கோடியில் நாவலடியான், மாரியம்மன் கோவிலில்அன்னதான கூடம், திருமதில் சுவர் கட்டுவதற்கு ஒப்புதல்
ADDED : ஏப் 20, 2025 01:33 AM
மோகனுார்:மோகனுார் நாவலடியான், மாரியம்மன் கோவிலில், 3.50 கோடி ரூபாய் மதிப்பில், அன்னதான கூடம், திருமதில்
சுவர் கட்ட, ஹிந்து சமய அறநிலையத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
முற்காலத்தில் வணிகம் செய்ய சென்ற சில வணிகர்கள், இத்தலம் வழியாக சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இந்த இடத்திற்கு வந்தபோது இரவாகி விட்டது. அதனால், அங்கேயே தங்கினர். அப்போது, தாங்கள் கொண்டு வந்திருந்த ஒரு கல்லை நாவல் மரத்திற்கு அடியில் வைத்து துாங்கிவிட்டனர். மறுநாள் காலையில் அவர்கள் கிளம்பியபோது கல்லை எடுக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை.
அப்போது பக்தர் ஒருவர் மூலமாக வெளிப்பட்ட கருப்பண்ணசாமி, நானே கல் வடிவில் இருப்பதாகவும், தன்னை அங்கேயே வைத்து கோவில் எழுப்பும்படி கூறினார். பக்தர்களும் கல்லை அப்படியே வைத்து கருப்பண்ண சாமியாக பாவித்து வணங்கினர்.
இவர், நாவல் மரத்தின் அடியில் குடிகொண்டதால், 'நாவலடியான்' என்றும், 'நாவலடி கருப்பண்ணசாமி' என்றும் பெயர் பெற்றார். பிற்காலத்தில், இங்கு கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில், அனைத்து நாட்களிலும் விசேஷ வழிபாடு நடத்தப்படுகிறது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை, காளியம்மன், நாவலடி கருப்பண்ணசாமி அறங்காவலர் குழுவினர் பராமரித்து வருகின்றனர். இங்கு, ஆண்டு முழுவதும், சுவாமிக்கு, அசைவ படையல் வைப்பது குறிப்பிடத்தக்கது.
மோகனுார் நாவலடியான் கோவிலில் அன்னதான கூடம், மதில் சுவர், மாரியம்மன் கோவிலில், சுற்றுச்சுவர் கட்டுவதற்கு, ஹிந்து சமய அறநிலையத்தில், அறங்காவலர் குழுவினர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் நடந்த மானிய கோரிக்கையின் போது, நாவலடியான் கோவிலில், 1.50 கோடி ரூபாயில், புதிதாக அன்னதான கூடம் கட்டவும், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், திருமதில் சுவர் கட்டவும், மாரியம்மன் கோவிலில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், திருமதில் கட்டவும், ஹிந்து சமய அறநிலையத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

