/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லுாரி அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஒப்புதல்
/
மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லுாரி அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஒப்புதல்
மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லுாரி அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஒப்புதல்
மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லுாரி அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஒப்புதல்
ADDED : செப் 26, 2024 02:13 AM
நாமக்கல்: ''நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லுாரி அமைக்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்,'' என, பொது கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக சட்டசபை பொது கணக்குக் குழுவினர், அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. பொது கணக்குக் குழு தலைவர் செல்-வப்பெருந்தகை தலைமை வகித்தார். குழு உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன், சந்திரன், டாக்டர் சரஸ்வதி, சேகர், ஜெயராம், கலெக்டர் உமா, எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ.,
ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக சட்டசபை பொது கணக்குக் குழுத்தலைவர் செல்வப்பெ-ருந்தகை பேசியதாவது:பொது கணக்கு குழு என்பது, லோக்சபா பொது கணக்கு குழு, சட்டசபை பொது கணக்கு குழு இல்லாமல், ஜனநாயகம் முழுமை அடையாது என, நம் இந்திய அரசியலமைப்பில் தெரி-விக்கப்பட்டுள்ளது.
எம்.பி., ராஜேஸ்குமார் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லுாரி அமைக்-கவும், ஆனங்கூர் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டவும், அரசுக்கு பொது
கணக்கு குழு பரிந்துரை செய்யும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, 12 பேருக்கு, 92.27 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. துணைச்செயலாளர் ரேவதி, குழு அலுவலர் சுமதி, சார்பு செயலாளர் பாலசீனிவாசன், எஸ்.பி.,
ராஜேஷ்கண்ணன், டி.ஆர்.ஓ., சுமன், அரசுத்துறை அலுவ-லர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.