/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வணிக பயன்பாடு நிலங்களுக்கு தோராய பட்டா: பா.ஜ., கண்டனம்
/
வணிக பயன்பாடு நிலங்களுக்கு தோராய பட்டா: பா.ஜ., கண்டனம்
வணிக பயன்பாடு நிலங்களுக்கு தோராய பட்டா: பா.ஜ., கண்டனம்
வணிக பயன்பாடு நிலங்களுக்கு தோராய பட்டா: பா.ஜ., கண்டனம்
ADDED : மே 21, 2025 02:16 AM
ராசிபுரம் :நாமகிரிப்பேட்டை யூனியன், கார்கூடல்பட்டியில் வணிக நிறுவனம் உள்ள நிலங்களுக்கு தோராய பட்டா வழங்கியதற்கு, பா.ஜ., ஒன்றிய தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பட்டா இல்லாமல், நத்தம் நிலத்தை பயன்படுத்தி வரும் மக்களுக்கு அல்லது ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வருபவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதன்கீழ், நீண்ட நாட்களாக பயன்படுத்தி வரும் பட்டா இல்லாத நிலங்கள் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுத்தனர். தொடர்ந்து ஒரு நபருக்கு அதிகபட்சமாக, 1,200 சதுரடி நிலம் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. முக்கியமாக, ஆண்டு வருவாய், இரண்டு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். வணிக நிலங்களாக இருக்க கூடாது. வணிக கட்டடங்கள் இருக்க கூடாது. வீட்டு மின் இணைப்பு, குறிப்பிட்ட முகவரியில் ரேஷன் அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் இருக்க வேண்டும் என, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து கணக்கெடுத்து, பயனாளிகள் பட்டியல் தயார் செய்து உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு பின் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நாமகிரிப்பேட்டை யூனியன், கார்கூடல்பட்டியில் ஏழு கடைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் தோராய பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் கண்ணன், கலெக்டருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கார்கூடல்பட்டி பிட்-1ல் சர்வே எண், 954ல் உள்ள, 3,000 ச.மீட்டர் நிலத்தை ஆளுங்கட்சியின் உதவியுடன், வணிக நோக்கத்துடன் செயல்படும் கடைகள் கட்டப்பட்டுள்ள நிலங்களுக்கு தோராய பட்டா, கடந்த பிப்., 28ல் வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு சம்பந்தப்பட்ட ஆர்.ஐ., கையெழுத்து போடாத நிலையில், ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ள ஆர்.ஐ., கையெழுத்துடன் பட்டா வழங்கியுள்ளனர். இதை பா.ஜ., கண்டிக்கிறது. மேலும், இந்த பட்டா வழங்குவதில் மட்டும், 50 லட்சம் ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. எனவே உயர் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.