/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமா?
/
வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமா?
ADDED : மே 07, 2025 02:05 AM
பள்ளிப்பாளையம்:
பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட, 15 பஞ்சாயத்து பகுதிகளிலும் தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துவது தொடர்ந்து நடக்கிறது. இதனால், நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் அச்சமடைகின்றனர். வாகன ஓட்டிகளை துரத்திச்செல்வதால் தடுமாறி சென்று விபத்தில் சிக்குகின்றனர்.
நாய்கள் கடித்து ஆடுகள் இறப்பது குறித்து மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் நாய் தொல்லை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவும், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையாக ஊசி போட்டிருப்பதையும் உறுதி செய்ய, பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகள் தனிகவனம் செலுத்த வேண்டும்.

