/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிச்சயித்த திருமணம் நிறுத்தம்: உதவி பேராசிரியை மாயம்
/
நிச்சயித்த திருமணம் நிறுத்தம்: உதவி பேராசிரியை மாயம்
நிச்சயித்த திருமணம் நிறுத்தம்: உதவி பேராசிரியை மாயம்
நிச்சயித்த திருமணம் நிறுத்தம்: உதவி பேராசிரியை மாயம்
ADDED : ஆக 15, 2025 02:03 AM
குமாரபாளையம்:குமாரபாளையத்தில் பணிபுரியும் கல்லுாரி உதவி பேராசிரியை, நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிறுத்தப்பட்ட நிலையில் மாயமானார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் சுபத்ரா, 23; இவரது தந்தை ராஜவேல், 48; பழநி நகராட்சி ஆணையாளர். சுபத்ராவுக்கும், பிரபாகரன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சுபத்ரா முனைவர் பட்டம் படிக்க, சான்றிதழ் சரி பார்க்க, ஆக., 8, இரவு 7:00 மணிக்கு, சென்னை அண்ணா பல்கலை சென்றார். ஆக., 10ல், சென்னையில் இருந்து, குமாரபாளையம் கல்லுாரிக்கு, திரும்பி விட்டுதாக சுபத்ரா, தந்தையிடம் கூறியுள்ளார். அவரது பேச்சில் நெருடல் இருந்ததால், சென்னையில் உள்ள சுபத்ரா தோழியிடம் கேட்டபோது, சென்னை அண்ணா பல்கலை கேன்டீன் வாசலில், சுபத்ரா, பிரபாகரன் இடையே வாக்குவாதம் நடந்தது தெரிந்தது. குமாரபாளையம் கல்லுாரியில், விசாரித்தபோது அங்கு அவர் வரவில்லை என, தெரிந்தது.
இதையடுத்து, ராஜவேல், குமாரபாளையம் போலீசில், தன் மகள் சுபத்ராவை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார்.