நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம்
பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மது விற்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பவானியை சேர்ந்த வேலு, 48, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

