ADDED : அக் 29, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டியில்
கலைத்திருவிழா
எருமப்பட்டி, அக். 29-
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா, எருமப்பட்டியில் நடந்தது.
இதில், 9, 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் கலந்துகொண்டு, 'சூழல் பாதுகாப்பு, அனைவரின் பொறுப்பு' என்ற தலைப்பில் நடனமாடினர்.
வட்டார அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.