/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு மகளிர் கல்லுாரியில் கலைத்திருவிழா -தொடக்கம்
/
அரசு மகளிர் கல்லுாரியில் கலைத்திருவிழா -தொடக்கம்
ADDED : செப் 19, 2025 01:19 AM
நாமக்கல், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், 2025-26ம் கல்வியாண்டுக்கான கலைத்திருவிழா நேற்று தொடங்கியது.
தமிழகரசு மற்றும் உயர் கல்வித்துறை சார்பில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரி கலையரங்கில் கலைத்திருவிழா நடந்தது. கல்லுாரி முதல்வர் மாதவி தலைமை வகித்தார்.
நேற்று முதல் அக்., 9 வரை நடக்கும் விழாவில், மாணவியரின் படைப்பாற்றல், கலை நயம், அறிவாற்றல், பல்துறை திறன்களை வெளிக்கொணரும் நோக்கில், ஏழு முக்கிய பிரிவுகளின் கீழ், 32 துணை கலை போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், இலக்கியம், இசை, நடனம், நாடகம், கலை, தொழில்நுட்பம், இயற்கை சார்ந்த போட்டிகள் என, பல்வேறு போட்டிகள் நடக்க உள்ளன.
ஆங்கில துறைத்தலைவர் அலெக்சாண்டர், கணித துறைத்தலைவர் எமிமாள் நவஜோதி, கணினி அறிவியல் துறைத்தலைவர் சுகந்தி ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.