/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா துவக்கம்
/
பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா துவக்கம்
ADDED : அக் 31, 2025 01:11 AM
ராசிபுரம்,  மாவட்ட அளவிலான அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா நேற்று தொடங்கியது.
அரசு பள்ளி மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 1ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா நடந்து வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா, ராசிபுரம் குறுக்கபுரத்தில் உள்ள தனியார்  மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது.
சி.இ.ஓ., மகேஸ்வரி குத்து விளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்து பேசுகையில்''அனைத்து மாணவ மாணவியரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, போட்டிகளில் வெற்றி பெற்று நாமக்கல் மாவட்டத்தை, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க செய்ய வேண்டும்,''  என்றார்.
நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி, உதவி திட்ட அலுவலர் அருள் தாஸ்,  ராசிபுரம் வட்டார கல்வி அலுவலர் பிரபு குமார், நாமக்கல் முதன்மை கல்வி அலுவலக பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட  பலர்  கலந்து கொண்டனர்.

