/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரியாக்குழந்தை புதுார் மக்கள் இ-பட்டா கேட்டு மனு
/
அரியாக்குழந்தை புதுார் மக்கள் இ-பட்டா கேட்டு மனு
ADDED : செப் 09, 2025 02:08 AM
நாமக்கல் நாமக்கல் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில், நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாக்குழந்தை புதுார் பகுதி மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமகிரிப்பேட்டை அடுத்த தண்ணீர்பந்தல்காட்டில், பிற்பட்டோர் நலத்துறை சார்பில், 2009ல் வீட்டுமனை நிலம் பெற்றுள்ளோம். அந்த நிலத்திற்கு பாதை பிரச்னை இருந்ததால், இன்று வரை வீடுகட்டவில்லை. இ-பட்டா கேட்டு, கடந்த, 2024ல் விண்ணப்பித்திருந்தோம். ஆனால், தற்போது வரை இ-பட்டா வழங்கவில்லை.
இ--பட்டா வழங்கினால், தொகுப்பூதிய திட்டத்திலோ அல்லது பிரதமர் தொகுப்பூதிய திட்டத்திலோ கடன்பெற்று வீடு கட்டிக்கொள்ள தயாராக உள்ளோம். எனவே, இ-பட்டா மற்றும் தொகுப்பூதியத்தில் வீடு கட்டுவதற்கு ஆவண செய்ய வேண்டும். எங்கள் மனையில் போலி பட்டாதாரர்கள் வீடுகட்ட முயல்கின்றனர். உண்மை பயனாளிகளான எங்களுக்கு, இ.பட்டா வழங்காமல் இருப்பதால் போலி பட்டாதாரர்கள் அவர்கள் வைத்திருக்கும் பட்டாவே உண்மையானது என, மிரட்டுகின்றனர். எனவே, உண்மை பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.