/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சித்தம்பூண்டியில் கல்குவாரி மக்களிடம் கருத்து கேட்பு
/
சித்தம்பூண்டியில் கல்குவாரி மக்களிடம் கருத்து கேட்பு
சித்தம்பூண்டியில் கல்குவாரி மக்களிடம் கருத்து கேட்பு
சித்தம்பூண்டியில் கல்குவாரி மக்களிடம் கருத்து கேட்பு
ADDED : அக் 05, 2024 06:13 AM
ப.வேலுார்: - பரமத்தி அருகே, மணியனுாரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து நடத்திய, கிரானைட் கல் குவாரிகளுக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், ''சித்தம்பூண்டி, நடந்தை ஆகிய கிராமங்களில் கல்குவாரி அமைப்பது தொடர்பாக, அந்தந்த கிராம மக்களிடம், துறை சார்ந்த அதிகாரிகளால் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. அதன்படி, மாவட்ட நிர்வாகம் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்,'' என்றார்.
அதை தொடர்ந்து, நடந்தை, சித்தம்பூண்டி கிராமத்தில், கல்குவாரிகள் அமைப்பது தொடர்பாக அந்தந்த கிராம மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, சுள்ளிபாளையத்தை சேர்ந்த திருநங்கை அருணா பேசுகையில், ''கல்குவாரி விவகாரத்தில் ஒரு சில தவறுகள் நடக்கலாம். அதை அதிகாரியிடம் சுட்டிக்காட்டி, சரி செய்ய வேண்டும். கல்குவாரி வேண்டாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது,'' என்றார்.திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, பரமத்தி வேலுார் தாசில்தார் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், குவாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.