/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழகம், புதுச்சேரி பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தடகள போட்டி
/
தமிழகம், புதுச்சேரி பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தடகள போட்டி
தமிழகம், புதுச்சேரி பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தடகள போட்டி
தமிழகம், புதுச்சேரி பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தடகள போட்டி
ADDED : மார் 11, 2024 11:39 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லுாரி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டி துவங்கியது.
தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த, 536 பாலிடெக்னிக் கல்லுாரியை சேர்ந்த, 960 மாணவ, மாணவியர் பங்கேற்கும் தடகள போட்டி துவங்கியது. ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வரும், தமிழ்நாடு, புதுச்சேரி தடகள போட்டிகள் அமைப்பின், மாநில தலைவருமான விஜயகுமார் தலைமை வகித்தார்.
டி.எஸ்.பி., இமயவரம்பன் போட்டியை துவக்கி வைத்தார். இதில், 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1,500 மீ., ஓட்ட பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. முன்னதாக விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை டி.எஸ்.பி., இமயவரம்பன் ஏற்றுக்கொண்டார்.
விளையாட்டு போட்டிக்கான ஜோதியை ஏற்றி வைத்து, அதனை கைகளில் ஏந்தியபடி விளையாட்டு வீரர்கள் மைதானத்தை வலம் வந்தனர். இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட தேர்ந்தெடுக்கப்படுவர் என, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

