/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காயத்துடன் சிகிச்சை பெற்ற ஏ.டி.எம்., கொள்ளையன் கைது
/
காயத்துடன் சிகிச்சை பெற்ற ஏ.டி.எம்., கொள்ளையன் கைது
காயத்துடன் சிகிச்சை பெற்ற ஏ.டி.எம்., கொள்ளையன் கைது
காயத்துடன் சிகிச்சை பெற்ற ஏ.டி.எம்., கொள்ளையன் கைது
ADDED : அக் 06, 2024 01:49 AM
பள்ளிப்பாளையம்: கேரள மாநிலத்தில் அக்., 27ல் மூன்று ஏ.டி.எம்., மையங்களில், 66 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து, அங்கிருந்து, கன்டெய்னர் லாரியில் கொள்ளை கும்பல் தப்பியது. இவர்களை நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே, போலீசார் விரட்டிச் சென்று, துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
இதில், கொள்ளையன் ஜூமாந்தின், 37, பலியானார். அசர் அலி, 28, காலில் குண்டு பாய்ந்தது. லாரியில் இருந்த இர்பான், சவுக்கீன் கான், முகமது இக்ரம், சபீர், முபாரக் ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே அசர் அலி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வெப்படை போலீசார், மருத்துவமனையில் இவரை நேற்று கைது செய்தனர்.