/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தோட்டத்து வீட்டில் கொள்ளை முயற்சி
/
தோட்டத்து வீட்டில் கொள்ளை முயற்சி
ADDED : மே 24, 2025 01:03 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் அருகே, அக்கரைப்பட்டி அடுத்த பொரசல்பட்டி அலிஞ்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜம்புகேஸ்வரன், 70; மனைவி கனகம், 65. ஜம்புகேஸ்வரனுக்கு, ஐந்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் கொட்டகை அமைத்து, பத்துக்கு மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த, 15ல், இரண்டு ஆடுகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து புகார்படி, வெண்ணந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஜம்புகேஸ்வரன் கொட்டகையில் கட்டியிருந்த ஆடுகளை மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர். அப்போது ஆடுகள் சத்தம் போடவே, விழித்துக்கொண்ட ஜம்புகேஸ்வரன் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். இதையறிந்த மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து, ஜம்புகேஸ்வரன் மீண்டும் வெண்ணந்துார் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார்.
தனியாக இருக்கும் முதிய தம்பதியரை குறி வைத்து நடக்கும் கொள்ளை முயற்சியை தடுக்க, தோட்டத்து வீடுகளை கண்காணித்து போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.