/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தங்க கிணற்றில் மண் அள்ள முயற்சி: பொது மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
/
தங்க கிணற்றில் மண் அள்ள முயற்சி: பொது மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
தங்க கிணற்றில் மண் அள்ள முயற்சி: பொது மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
தங்க கிணற்றில் மண் அள்ள முயற்சி: பொது மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
ADDED : பிப் 04, 2024 11:29 AM
எருமப்பட்டி: முத்துக்காப்பட்டியில் உள்ள தங்க கிணற்றில், கொட்டப்பட்டுள்ள தாது மண்ணை அள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே முத்துக்காப்பட்டி பஞ்.,ல், மேதரமாதேவி கிராமம் உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், ஊர் நடுவில் பாழடைந்த பெரிய கிணறு இருந்தது. இதை மூட வேண்டும் என, 2011ல், பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சேந்தமங்கலத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த, கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்கம் அலசும், 250 லோடு தாது மண்ணை, யூனியன் நிதியில் இருந்து வாங்கி கிணற்றில் கொட்டி மூடி விட்டனர்.
மண்ணில் அமிலம் கலந்து அலசும் போது பிளாட்டினம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கிடைப்பதாக கூறப்படும் நிலையில், 2017ல், இந்த தாது மண், 1 டன், 7,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், இந்த மண்ணை அள்ள தனி நபர் ஒருவர் முயற்சி எடுத்துள்ளார். ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் முயற்சி கைவிடப்பட்டது.
அதன்பின், தற்போது கிணற்றில் கொட்டப்பட்டுள்ள தாது மண்ணின் மதிப்பு, 200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மண்ணை அள்ள நேற்று பொக்லைன் இயந்திரம் சென்றுள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு சென்ற சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் மற்றும் போலீசார், மண் அள்ளுவதை நிறுத்தியதுடன், பேச்சுவார்த்தை நடத்தி பொது மக்களை கலைந்து போக செய்தனர்.