/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அத்தியாவசிய பொருட்களுக்கு அபராதம் திரும்ப பெற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
அத்தியாவசிய பொருட்களுக்கு அபராதம் திரும்ப பெற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அத்தியாவசிய பொருட்களுக்கு அபராதம் திரும்ப பெற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அத்தியாவசிய பொருட்களுக்கு அபராதம் திரும்ப பெற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : மே 11, 2024 06:56 AM
நாமக்கல் : 'சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை இறக்காமல், அபராதம் விதிக்கும் சுற்றறிக்கையை திரும்ப பெறவேண்டும்' என, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம், மாவட்ட சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது. மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாஸ்கரன் வரவேற்றார்.
அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில், தரமான பொருட்களாக பொட்டலமாக வழங்க வேண்டும். சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை இறக்காமல், அபராதம் விதிக்கும் சுற்றறிக்கையை திரும்ப பெறவேண்டும்.
ரேஷன் கடையில், பொருட்களை இறக்குவதற்கு கட்டாய இறக்கு கூலி வசூல் செய்வதை தடுக்க வேண்டும். விளம்ப்பு தொகையை, 107 ரூபாயாக உயர்த்திய பின்பும், கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சிக்கு ஒரு குவிண்டாலுக்கு இறக்கு கூலியை பதிவாளர் நிர்ணயம் செய்ய வேண்டும். இருப்பு அதிகமாக இருந்தால், அபராதம் விதிப்பதை கைவிட்டு, பழைய நடைமுறைப்படி இருப்பில் சேர்த்து கெகள்ள
வேண்டும்.
கட்டுப்பாடற்ற பொருள் காலாவதி ஆகும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட சங்கம் திருப்பி எடுத்து கொள்முதல் செய்யப்பட்ட நிறுவனத்திடம் திருப்பி செலுத்த வழிவகை செய்ய வேண்டும். ரேஷன் கடையில் பணியாற்றும் அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் பாகுபாடின்றி வழங்க வேண்டும்.
விடுமுறை நாட்களில் பொருட்களை நகர்வு பணி செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.