ADDED : டிச 31, 2024 07:27 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், ஜனநாயக மக்கள் கழகம், உழைப்பாளி மக்கள் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜனநாயக மக்கள் கழக மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார்.
அதில், நாமக்கல் மாவட்டத்தின் விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும்; கனிமவளம், நீர்வளம், மண்வளம் போன்றவை மாசுபடுதலை தடுக்க வேண்டும்; மாவட்டத்தின் முக்கிய தொழில்களான லாரி பாடி பில்டர்ஸ், ரிக்வண்டி மற்றும் கனரக சரக்கு வாகனங்களின் உதிரிபாகங்களுக்கு ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். உழைப்பாளி மக்கள் கட்சியின் மாநில செயலாளர் முருகேசன், ஜனநாயக மக்கள் கழக நிறுவன தலைவர் அசோக்கண்ணன், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி நிறுவன தலைவர் நல்வினை செல்வன், தொழிற்சங்க தலைவர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.