/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கைகளை கட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கைகளை கட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கைகளை கட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கைகளை கட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 04, 2025 01:09 AM
நாமக்கல், 'சிப்காட்' தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், கைகளை கட்டிக்கொண்டு நுாதன முறையில், விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில், 882 ஏக்கர் பரப்பளவில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை அமைக்க கூடாது என, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள், 'சிப்காட்' எதிர்ப்பு இயக்கத்தினர், விவசாய முன்னேற்ற கழகத்தினர், பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 'சிப்காட்' தொழிற்பேட்டை திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, 'சிப்காட்' தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிப்காட் திட்டத்திற்கான போலி அரசாணையை ரத்து செய்ய வேண்டும். விளை நிலங்களை அழிக்கக்கூடாது என கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கைகளை கட்டிக்கொண்டு நுாதன முறையில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.