ADDED : ஜன 30, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்: நாமக்கல்லில், தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்டதாரிகள் சங்க மாவட்ட
தலைவர் பாபு, செயலாளர் மோகன், பொருளாளர் சரண்யா ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
மத்திய அரசு பொறியாளர்களுக்கு இணையாக, தமிழக அரசின் துறை வாரியங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் பொறியாளர்களுக்கும் ஊதிய விகிதம் நிர்ணயிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
