/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பறிமுதல் செய்யப்பட்ட உரிமம் பெறாத துப்பாக்கிகளை ஏலம் விட நடவடிக்கை
/
பறிமுதல் செய்யப்பட்ட உரிமம் பெறாத துப்பாக்கிகளை ஏலம் விட நடவடிக்கை
பறிமுதல் செய்யப்பட்ட உரிமம் பெறாத துப்பாக்கிகளை ஏலம் விட நடவடிக்கை
பறிமுதல் செய்யப்பட்ட உரிமம் பெறாத துப்பாக்கிகளை ஏலம் விட நடவடிக்கை
ADDED : ஆக 02, 2024 01:04 PM
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட உரிமம் பெறாத துப்பாக்கிகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாட்டத்தில், கொல்லிமலை மலை வாழ்மக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வசிக்கும் மக்கள், தங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி, இரட்டை குழல் துப்பாக்கி மற்றும் கை துப்பாக்கிகளை, போலீசார் கடந்த, 2002ம் ஆண்டில் இருந்து பல்வேறு அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட, 350 துப்பாக்கிகளை நாமக்கல் மாவட்ட போலீஸ் துறையின் மூலம் பாதுகாக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த துப்பாக்கிகளை மாவட்டத்தில் உள்ள துப்பாக்கி உரிமம் உள்ளவர்களுக்கு, ஏலம் விடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், 350 துப்பாக்கிகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை மீண்டும் உபயோகப்படுத்தும் வகையில் உள்ள துப்பாக்கிகள் குறித்து, டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட எஸ்.பி., ராஜேஸ் கண்ணன், ஆயுதப்படை டி.எஸ்.பி., இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில், சேலம் தனியார் துப்பாக்கி பணிமனையின் உறுப்பினர் சரவணன் குழு, துப்பாக்கிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.