/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆற்று பகுதிகளை அதிகாரிகள் கவனிக்க வேண்டும்
/
ஆற்று பகுதிகளை அதிகாரிகள் கவனிக்க வேண்டும்
ADDED : மே 03, 2024 07:21 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் ஆற்றுப்பகுதியில், நீச்சல் பழக முற்படும் சிறுவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைத்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றுப்பகுதிக்கு, தினமும் ஏராளமான சிறுவர்கள் ஆற்றில் குளிக்க வருகின்றனர். அதே போல வெளியூரில் இருந்து பலரும் நீச்சல் பழகவும், வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் ஆற்றுக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் சிறுவர்கள், ஆர்வம் மிகுதியில் ஆழமான பகுதிக்கு செல்கின்றனர். பலர் ஆபத்தான பகுதியில் நீச்சல் பழகுகின்றனர். எனவே, ஆற்றுப்பகுதியில் ஆபத்தான இடத்தில் எச்சரிக்கை பலகையும், சிறுவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு பலகையும் அதிகாரிகள் வைக்க வேண்டும். மேலும் ஆற்றுப்பகுதியை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.