ADDED : மார் 29, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சேந்தமங்கலம்
அருகே, துத்திக்குளம் பஞ்., தொட்டிப்பட்டியை சேர்ந்தவர்
ரஞ்சித்குமார், 21; ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்த, 7ம் வகுப்பு
படிக்கும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், சேந்தமங்கலம் போலீசில்
புகாரளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிந்த போலீசார்,
ரஞ்சித்குமாரை போக்சோவில் கைது செய்தனர்.

