ADDED : செப் 26, 2026 06:41 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம்
அருகே, வெப்படை பகுதியை சேர்ந்தவர் வீராசமி, ஷேர் ஆட்டோ டிரைவர்.
இவர், நேற்று இரவு, 7:30 மணிக்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில், ''வெப்படை பகுதியில் பல ஆண்டாக ஷேர் ஆட்டோ
ஓட்டி வந்தேன். இடையில் ஓட்டவில்லை. மீண்டும் ஓராண்டாக ஷேர்
ஓட்டுவதற்கு வந்தேன். ஆனால் மற்ற ஷேர் ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள், நான்
ஆட்டோ ஓட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது குறித்து
வெப்படை போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், நேற்று
இரவு சாலை மறியலில் ஈடுபட்டேன்,'' என்றார். தகவலறிந்து சென்ற
வெப்படை போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட வீராசாமியிடம்
பேச்சுவார்த்தை நடத்தினர்.
