/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிலம்ப போட்டியில் சாதனை அரசுப்பள்ளி மாணவிக்கு விருது
/
சிலம்ப போட்டியில் சாதனை அரசுப்பள்ளி மாணவிக்கு விருது
சிலம்ப போட்டியில் சாதனை அரசுப்பள்ளி மாணவிக்கு விருது
சிலம்ப போட்டியில் சாதனை அரசுப்பள்ளி மாணவிக்கு விருது
ADDED : ஜூன் 21, 2025 01:10 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலத்தில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நண்பர்கள் குழு சார்பில், கோடை விடுமுறையில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நடந்த அனைத்து போட்டிகளிலும், சேந்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, எட்டாம் வகுப்பு மாணவி காவியா, வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார்.
சாதனை படைத்த மாணவிக்கு, அரசு பள்ளி வளாகத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
துணை தாசில்தார் மதன், மாணவி காவியாவுக்கு, 'வீரமங்கை' விருது வழங்கி பாராட்டினார். தலைமை ஆசிரியர் சுமதி, உதவி தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன், நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா, வி.ஏ.ஓ., பிரகாஷ், மாவட்ட கலை இலக்கிய பண்பாடு துணை அமைப்பாளர் ஸ்டாலின், சிலம்ப பயிற்சியாளர் மனோஜ், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.