/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் அரசு கல்லுாரி பேராசிரியருக்கு விருது
/
ராசிபுரம் அரசு கல்லுாரி பேராசிரியருக்கு விருது
ADDED : பிப் 14, 2025 07:21 AM
ராசிபுரம்: நாமக்கல்லில் நடந்த புத்தக திருவிழாவில், ராசிபுரம் அரசு கல்லுாரி பேராசிரியருக்கு விருது வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட பொது நுாலகத்துறை ஆகியவை சார்பில், நாமக்கல்லில், 10 நாட்கள் புத்தக திருவிழா நடந்தது. இதில், பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசினர். மேலும் மாணவ, மாணவிகளுக்கு திறன் வளர்ப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. ராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லுாரி அரசியல் துறைத்தலைவர் சிவக்குமார், தமது இல்லத்தில் பல்வேறு தலைப்புகளிலான நுால்கள், ஆய்வு கட்டுரைகளை பராமரித்து சிறந்த நுாலகமாக மாற்றி அமைத்ததற்கும், புத்தகங்கள் மூலம் மாணவர்களின் போட்டி தேர்வு பயன்பாட்டிற்கும் வழிகாட்டி வருவதை, கலெக்டர் உமா நேரில் ஆய்வு செய்திருந்தார்.
இதையடுத்து, புத்தக திருவிழா நிறைவு நாளில் சிவக்குமாரை பாராட்டி கலெக்டர் உமா நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். விருது பெற்ற பேராசிரியரை முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

