/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
/
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : செப் 13, 2024 06:54 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது.
நாமக்கல் அடுத்த, கீரம்பூர் பி.ஜி.பி.கல்லுாரி அரங்கில் நடந்த விழாவுக்கு, மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் மற்றும் தெற்காசியாவிலேயே முதல் முறையாக பார்முலா 4 கார் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகள் சிறப்பாக நடந்துள்ளது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை, தமிழகத்தில் நடத்தி பதக்கம் பட்டிலில் தமிழகத்தில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு பேசினார்.
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில்,'' மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தவிர்த்து, உயர்கல்வி பயில்வதை ஊக்கு விக்கும் வகையிலும், தொடர்ந்து கல்வி பயின்று வேலை வாய்ப்புகளை பெற்று, சமுதாயத்தில் உயர்நிலையை அடையும் வகையில், கல்விக்கு அதிகளவில் முக்கியத்தும் அளிக்கப்படுகிறது. விளையாட்டு போட்டிகளில் தோல்வியடையும் போது யாரும் கவலைப்பட வேண்டாம். அதை நாம் ஒரு அனுபவமாக எடுத்து கொள்ள வேண்டும்,'' என்றார்.